‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ முதல் ‘வரலாறு முக்கியம்’ வரை: இந்த வார தியேட்டர் ரிலீஸ் என்னென்ன?

By செய்திப்பிரிவு

இந்த வாரம் திரையரங்குகளில் வடிவேலு, ஜீவா உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரைத் துறைக்கு திரும்பியிருக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இயக்குநர் சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராவ் ரமேஷ், ஆனந்த்ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி கிருஷ்ணகுமார், ஷிவானி நாராயணன், 'லொள்ளு சபா' மாறன், மனோபாலா, 'லொள்ளு சபா' சேசு, டி.எம்.கார்த்திக், 'கேபிஒய்' ராமர், பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஆர்56: ப்ரியாமணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிஆர்56’. ப்ரவீன் ரெட்டி கதை எழுதியுள்ள இப்படத்தை ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியுள்ளார். நோபின்பால் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வரலாறு முக்கியம்: ஆர்,பி. செளத்ரி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள திரைப்படம் ‘வரலாறு முக்கியம்’. இது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 92-வது படம். நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் பிரக்யா நாகரா, விடிவி கணேஷ், கே.எஸ். ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா எனப் பலரும் நடித்துள்ள்ளனர். ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் 9-ம் தேதி திரைக்கு வருகிறது.

தாதா: நிதின் சத்யா, யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாதா’. கின்னஸ் கிஷோர் இயக்கியுள்ள இப்படத்தில் காயத்ரி, மனோபாலா, சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் கிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

குரு மூர்த்தி: நட்டி நட்ராஜ், ராம்கி நடிப்பில் உருவாகியுள்ள ‘குருமூர்த்தி’ படத்தை கே.பி.தனசேகர் இயக்கியுள்ளார். சத்ய தேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இப்படத்தில், பூனம் பஜ்வால், மொட்ட ராஜேந்திரன், ரவி மர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் 9-ம் தேதி வெளியிடப்பட்ட உள்ளது.

விஜயனாந்த்: ரிஷிகா ஷர்மா இயக்கத்தில் கன்னடத்தில் உருவாகியுள்ள படம் ‘விஜயானந்த்’. பான் இந்தியா முறையில் வெளியாகும் இப்படத்தில் நிஹல், பாபன் பூபண்ணா, வினயா பிரசாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய தொழிலதிபரான பத்மஸ்ரீ விருது பெற்ற விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்படும் இப்படம் 9-ம் தேதி வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்