சத்ரபதி சிவாஜியாக நடிக்கும் அக்‌ஷய் குமார் - அறிமுக வீடியோவுடன் தகவல்

By செய்திப்பிரிவு

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வரலாற்றைத் தழுவிய படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்க உள்ளார். இதற்கான அறிமுக வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் சமீபகாலமாக வரலாற்று படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் இந்தாண்டு வெளியான ‘சாம்ராட் பிருத்விராஜ்’ திரைப்படம் பான் இந்தியா முறையில் வெளியானது. ஆனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியடைந்தது. தொடர்ந்து இதே ஆண்டு ராமர் பாலத்தை அடிப்படையாக கொண்ட ‘ராம் சேது’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படமும் பான் இந்தியா முறையில் வெளியாகி நஷ்டத்தை சந்தித்தது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது அவர் அடுத்ததாக நடிக்கும் படம் ‘வேதாத் மராத்தே வீர் டவுட்லே சாத்’ (Vedat Marathe Veer Daudale Saat). மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளியன்று மராத்தி, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் இப்படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், இதற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாகவும் நடிகர் அக்‌ஷய் குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று நான் மராத்தி திரைப்படமான ‘வேதாத் மராத்தே வீர் டவுடலே சாத்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குகிறேன். அதில் சத்ரபதி சிவாஜி மகராஜ் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். அன்னை ஜிஜாவின் ஆசீர்வாதத்திலிருந்தும் அவரது வாழ்க்கையிலிருந்தும் உத்வேகம் பெற்று என்னால் முடிந்ததைச் செய்வேன்!” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்திற்கான அறிமுக வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்