மறைந்த நடிகர் ஹரி வைரவன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக விஷ்ணு விஷால் அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

உடல்நலக் குறைவால் மரணமடைந்த நடிகர் ஹரி வைரவனின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான 'வெண்ணிலா கபடிக் குழு' திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இப்படத்தில் அவருடன் அப்புகுட்டி, சூரி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன் உட்பட பலர் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் ஹரி வைரவன். இதையடுத்து, விஷ்ணு விஷாலுடன் 'குள்ளநரி கூட்டம்' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக ஹரி வைரவன் உயிரிழந்தார். அவரது மறைவு திரைப்படத் துறையில் உள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ‘கட்டா குஸ்தி’ பட வெற்றிவிழாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், “நல்ல கதைகளை படமாக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். படத்தில் எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறதா இல்லையா என்பது இரண்டாம்பட்சம் தான்.

மறைந்த நடிகர் வைரவன் எனக்கு நெருங்கிய நண்பர். கடந்த 6 மாதமாக அவருடன் தொடர்பில் தான் இருந்தேன். என்னால் முடிந்த உதவிகளை கடந்த 6 மாதமாக அவருக்கு செய்துவந்தேன். அவர் மனைவியிடம், உங்கள் குழந்தைகளின் படிப்புச் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என உறுதியளித்தேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்