மலையாள காமெடி நடிகர் கொச்சு பிரேமன் காலமானார்

By செய்திப்பிரிவு

பிரபல மலையாள காமெடி நடிகரான கொச்சு பிரமேன் உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 68.

நாடக கலைஞராக தனது கலை வாழ்க்கையை தொடங்கிய கொச்சு பிரேமன் பின்னர் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கினார். இவர், நகைச்சுவை நடிகராக பல திரைப்படங்களில் நடித்து உள்ளார். தொலைக்காட்சிகளில் பல மலையாள தொடர்களிலும் நடித்து உள்ளார்.1979-ல் மலையாளத் திரைப்படங்களில் அறிமுகமானார். ஆனால் அவரது முத்திரையைப் பதிக்க 90களின் இறுதி வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

1996-ம் ஆண்டு வெளிவந்த இவரின் ‘தில்லிவாலா ராஜகுமாரன்’ படத்தில் நடிகர் ஜெயராம், நடிகை மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏறக்குறைய 250 படங்களில் நடித்துள்ள கொச்சு பிரேமன் சுவாசக்கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
இந்ந்நிலையில், சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து இன்று காலமானார். அவருக்கு வயது 68. அவரது மறைவுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE