சினிமாவாகிறது புரூஸ் லீ வாழ்க்கை

By செய்திப்பிரிவு

பிரபல ஹாலிவுட் நடிகர், இயக்குநர் புரூஸ் லீ. சிறந்த குங்ஃபூ தற்காப்புக் கலை வீரரான இவர், அந்தக் கலையை, ஹாலிவுட்டில் பிரபலமாக்கியவர். இவருடைய ஆக்‌ஷன் படங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் 1973ம் ஆண்டு, தனது 32 வயதில் ஹாங்காங்கில் மரணமடைந்தார். அவர் மரணத்தில் சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில் அவர் சிறுநீரகத்தில் இருந்து அதிகளவு நீர் வெளியேற்ற முடியாமல் போனதே அவர் உயிரிழந்ததற்கு காரணம் என்று மருத்துவ நிபுணர்களால் சமீபத்தில் கூறப்பட்டது.

அவர் வாழ்க்கைக் கதையை ஹாலிவுட் இயக்குநர் ஆங் லீ திரைப்படமாக்குகிறார். இவர், ‘ஹல்க்’, ‘குரோச்சிங் டைகர், ஹிடன் டிராகன்’, ‘லைஃப் ஆஃப் பை’, ‘புரோக்பேக் மவுண்டேன்’ உட்பட பல படங்களை இயக்கியவர். புரூஸ் லீ பாத்திரத்தில் ஆங் லீயின் மகன், மசோன் லீ நடிக்கிறார். சோனி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்