சென்னை: "90'கள் தொடங்கித் தமிழில் பல நல்ல கதையம்சமுள்ள வெற்றிப்படங்களைத் தயாரித்து - தனக்கெனவும் தமது நிறுவனத்துக்கெனவும் தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட கே. முரளிதரனின் மறைவு திரையுலகுக்குப் பேரிழப்பு" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: "தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான கே. முரளிதரன் (66) நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
90'கள் தொடங்கித் தமிழில் பல நல்ல கதையம்சமுள்ள வெற்றிப்படங்களைத் தயாரித்து - தனக்கெனவும் தமது நிறுவனத்துக்கெனவும் தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட கே. முரளிதரன் தயாரிப்பாளர் சங்கத்திலும் ஆர்வத்துடன் செயல்பட்டார். மூத்த தயாரிப்பாளரான அவரது மறைவு திரையுலகுக்குப் பேரிழப்பு.அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ‘அன்பே சிவம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரான கே.முரளிதரன் அண்மைக்காலமாக படங்களை தயாரிக்காமல் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், நவ.30-ம் தேதி காலை, முரளிதரன், மனைவி ருத்ராவுடன், திருநள்ளார், பட்டீஸ்வரம், நாதன்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயிலுக்கு சென்று விட்டு, அன்றிரவு அறையில் தங்கினார். தொடர்ந்து நேற்று (டிச.1) காலை, ஆலங்குடி குருபகவான் கோயிலுக்குச் சென்று விட்டு, நாச்சியார்கோயிலுக்கு வந்தனர். கோயில் மூலவர் அருகிலுள்ள கல்கருடன் பகவானைத் தரிசனம் செய்ய முயன்ற போது, திடீரென மயங்கி அங்குள்ள படிக்கட்டில் அமர்ந்தார் முரளிதரன்.
இதனையறிந்த அவருடைய மனைவி ருத்ரா, மக்கள் தொடர்பாளர் ஸ்வீட் ரவி மற்றும் அங்கிருந்தவர்கள், அவரை, கோயில் அருகிலுள்ள மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். ஆனால், நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலப்பட்ட அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
16 mins ago
சினிமா
52 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago