நடிகர் ராம் சரண் நடிக்கும் ‘ஆர்சி15’ (RC 15) படத்தின் நியூஸிலாந்து படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதில் ஒரு பாடலுக்காக மட்டும் ரூ.15 கோடி செலவிடபட்டுள்ளது.
‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்குப்பிறகு நடிகர் ராம்சரண் இயக்குநர் ஷங்கருடன் கைகோத்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘ஆர்சி15’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஷங்கர் கமலை வைத்து ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை நடத்திவரும் அதேவேளையில், ராம் சரணனின் ‘ஆர்சி15’ பணிகளையும் கவனித்து வருகிறார்.
பான் இந்தியா படமாக உருவாகி வரக்கூடிய இந்தத் திரைப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் புதிய ஷெட்யூலுக்காக படக்குழு நியூஸிலாந்து சென்றுள்ளது. இயக்குநர் ஷங்கர் இங்குள்ள அழகான தளங்களில் படத்தின் முக்கிய காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டிருந்திருக்கிறார்.
» ‘நீர்ப்பறவை - பாகம் 2’ தொடங்கப்படும் - இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு
» ‘டிமான்ட்டி காலனி 2’ படப்பிடிப்பு தொடக்கம் - அதிகாரபூர்வ அறிவிப்பு
இந்நிலையில், நியூஸிலாந்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நியூஸிலாந்து படப்பிடிப்புத் தளத்தில் இருந்து ராம்சரணின் ஸ்டைலிஷானப் புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
மேலும், நியூஸிலாந்தில் ரூ.15 கோடி செலவில் பாடல் ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்தில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் தனித்துவமாகவும் பார்வையாளர்களுக்கு நல்லதொரு காட்சியனுபவமாகவும் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago