இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ’லவ் டுடே’ படத்தின் தலைப்பை பயன்படுத்தியதற்காக அதன் இயக்குநருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் ‘கோமாளி’. 90-ஸ் கிட்ஸின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள படம் 'லவ் டுடே'.
2கே கிட்ஸ்களின் சமகால காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் நாயகியாக இவானா நடித்துள்ளார். தவிர, யோகிபாபு, சத்யராஜ், ராதிகா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்பாத்தி எஸ்.அகோரம் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.படம் உலக அளவில் படம் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் படத்தின் தலைப்பை பயன்படுத்தியதற்காக அதன் லவ் டுடே இயக்குநருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “லவ் டுடே படத்தின் தலைப்பை பயன்படுத்தியதில் அதனை உருவாக்கியவருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன். ‘ லவ் டுடே’ (1997) புகழ் இயக்குநர் பாலசேகரன். காலத்தால் அழியாத தலைப்பை உருவாக்கியுள்ளீர்கள். இது தொடர்பாக பெருந்தன்மையுடன் இருந்ததற்கும் தலைப்பிற்கும் நன்றி சார்” எனப் பதிவிட்டுள்ளார். வரும் டிசம்பர் 2-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
37 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago