திரைத்துறை அப்டேட்ஸ்: ‘பழனிச்சாமி வாத்தியார்’ முதல் ‘லவ் டுடே’ வரை

By செய்திப்பிரிவு

கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம்: நடிகர் கார்த்திக் மகன், கவுதம் கார்த்திக். ‘கடல்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தபோது, ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகன் மீது காதல் கொண்டார். சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நேற்று திருமணம் செய்துகொண்டனர். இதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அவர்களுக்குத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

> சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது.

> கவுண்டமணியின் ‘பழனிச்சாமி வாத்தியார்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வரும் தகவலை, அவர் தரப்பு மறுத்துள்ளது.

> மறுவெளியீடு செய்யப்படும் ‘பாபா’ படத்தின் புதிய காட்சிக்கான டப்பிங்கை முடித்துள்ளார், ரஜினிகாந்த்.

> பிரதீப் ரங்கநாதன், இவானா நடித்து வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ டிச.2-ல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.

50-வது வருடத்தில் ஒளிப்பதிவாளர்கள் சங்கம்: தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம், 1972ம் ஆண்டு, நவ.27ம் தேதி தொடங்கப்பட்டது. அப்போது ஏ.வின்செட் நிறுவனத் தலைவராகவும் பி.என்.சுந்தரம் செயலாளராகவும் எஸ்.மாருதி ராவ் பொருளாளராகவும் இருந்தனர். முதல் உறுப்பினராக இரானி சேர்க்கப்பட்டார்.

‘பெஃப்சி’ அமைப்புடன் இணைக்கப்பட்ட இந்தச் சங்கம் இப்போது 50 வருடத்தை எட்டி இருக்கிறது. இதையடுத்து இதன் இப்போதைய தலைவரான கார்த்திக் ராஜா, பொதுச் செயலாளர் இளவரசு, பொருளாளர் சக்தி சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். என்ன மாதிரியான கொண்டாட்டம் என்பது பற்றி ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நடிகை பற்றி அவதூறு - இளைஞர் கைது: பிரபல தெலுங்கு நடிகை அனசுயா. இவர் ஷணம், கில்லாடி, புஷ்பா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில்இவருடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இளைஞர் ஒருவர் அவதூறு பரப்பி வந்தார். இதுபற்றி அனசுயா ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். விசாரணை நடத்திய போலீஸார், ஆந்திர மாநிலம் பசலபுடி கிராமத்தைச் சேர்ந்த வெங்கட ராஜு என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்