நிறைவடைகிறது அஜித்தின் ‘துணிவு’ படப்பிடிப்பு: ஜன.11-ல் வெளியீடு?

By செய்திப்பிரிவு

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) நிறைவடையும் எனவும், படம் வரும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்குப் பிறகு நடிகர் அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணி தற்போது ‘துணிவு’ படத்திற்காக மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிகை மஞ்சு வாரியர் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.

இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு நாளை (நவம்பர் 29) தேதியுடன் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, படத்தின் ட்ரெய்லரை புத்தாண்டு அன்று அதாவது நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், படம் அடுத்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

56 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

மேலும்