தெலுங்கு இயக்குநருடன் நடிகர் தனுஷ் இணைந்திருக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் விரைவில் ‘வாத்தி’ படம் திரைக்கு வர உள்ளது. பைலிங்குவலாக உருவாகும் இப்படம் தெலுங்கில் ‘சார்’ என தலைப்பில் வெளியாகிறது. இதையடுத்து அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் கைகோத்துள்ளார் தனுஷ்.
கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஃபிடா’ (Fidaa), 2021-ம் ஆண்டு வெளியான ‘லவ் ஸ்டோரி’ படங்களை இயக்கி புகழ் பெற்றவர் சேகர் கம்முலா. இவரது இயக்கத்தில் நடிகர் தனுஷ் அடுத்ததாக புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படம் பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
» ‘பாபா’ மறுவெளியீட்டுக்காக டப்பிங் பணியில் ரஜினி - வைரல் புகைப்படங்கள்
» மஞ்சிமா மோகனை கரம்பிடித்த கௌதம் கார்த்திக் - சென்னையில் நடந்த திருமணம்
இந்நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும் இந்தப்படம் குறித்து மற்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago