நடிகர்கள் மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்தித் திருமணம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நெருங்கிய நண்பர்களும், திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கடந்த 2013-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனாக இவர், ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோல, கடந்த 2016-ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். ‘களத்தில் சந்திப்போம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கௌதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் கடந்த 2019 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான ‘தேவராட்டம்’ படத்திலிருந்தே காதலித்ததாக கூறப்படுகிறது.
» அவதூறு பரப்புகிறார்கள்: நடிகை பவித்ரா புகார்
» ஜேம்ஸ்பாண்ட் வாய்ப்பை நிராகரித்தேன்: நடிகர் ஹியூ ஜாக்மேன் தகவல்
கடந்த நவம்பர் 23-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கௌதம் கார்த்தி தான் முதலில் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும், நேரம் கேட்டு பின் யோசித்து மஞ்சிமா மோகன் அவருக்கு பதில் கூறியதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இருவரும் சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். இன்று காலை நடைபெற்ற திருமணத்தில் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
16 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago