ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘வரலாறு முக்கியம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
‘காஃபி வித் காதல்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகும் படம் ‘வரலாறு முக்கியம்’. சூப்பர் குட் ஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இப்படத்தை சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ளார். மலையாள படங்களுக்கு இசையமைத்த ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில்,கே.எஸ்.ரவிக்குமார், காஷ்மீர் பர்தேஷி, பிரக்யா நாகரா, விஜி ரத்தீஷ், விடிவி கணேஷ், சித்திக், ஷாரா, ராமதாஸ், லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ட்ரெய்லர் எப்படி? வழக்கமான ரொமான்டிக் காமெடி ட்ராமாவாக உருவாகியுள்ள இப்படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 18+ வசனங்கள் மற்றும் காட்சிகளுடன் உருவாகியுள்ள படத்தின் ட்ரெய்லர் பெரிய அளவில் வித்தியாசப்படவில்லை. தமிழ் சினிமாவின் வழக்கமான காதல், சண்டை, ரீமீக்ஸ் பாடல் என வழக்கமான மசாலா பாணியை உறுதிப்படுத்துகிறது. படம் வரும் 9-ம் தேதி திரைக்கு வருகிறது.
» மீண்டும் தொடங்கியது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படப்பிடிப்பு
» மீண்டும் க்ரைம் த்ரில்லர் - உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ முதல் பார்வை
முக்கிய செய்திகள்
சினிமா
42 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago