மீண்டும் தொடங்கியது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘நேற்று இன்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரது நடிப்பில் ஆரம்பிக்கப்பட்டத் திரைப்படம் ‘அயலான்’. படத்தின் கதைப்படி வேற்றுக்கிரக வாசிகள் கதையில் இருக்கும்படி படமாக்கப்பட வேண்டியத் தேவை இருப்பதால், அதன் கிராஃபிக்ஸ் பணிகள் தரமானதாக உருவாக்கி வருகிறோம் என்றது படக்குழு. இதற்கிடையில் கரோனா, நிதி தொடர்பான பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு தாமதமாகி மீண்டும் இந்த வருடம் ஜனவரியில் தொடங்கி டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

எனினும், மறுபடியும் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டதன் காரணமாக கிராஃபிக்ஸ் பணிகள் தடைப்பட்டு தற்போது அதை சிவகார்த்திகேயன் தீர்த்து வைத்திருக்கிறார். இதனால், படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அயலான் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. `டாக்டர்', `டான்', `பிரின்ஸ்' படங்களுக்கு முன்பே சிவகார்த்திகேயன் கமிட் ஆன படம் `அயலான்' என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

41 mins ago

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்