தேசிய விருது பெற்ற பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே மறைவு

By செய்திப்பிரிவு

தேசிய விருது பெற்ற பழம்பெரும் மராத்தி நடிகர் விக்ரம் கோகலே காலமானார். அவருக்கு வயது 77.

மராத்தி, இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் விக்ரம் கோகலே. 1971-ம் ஆண்டு இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பர்வானா’ திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் விக்ரம் கோகலே. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘அனுமடி’ (Anumati) மராத்தி படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். அதுமட்டுமல்லாமல், ‘ஆகாத்’ என்ற படம் மூலமாக இயக்குநராகவும் அறிமுகமானார். பல்வேறு படங்களில் நடித்தவர், அண்மையில் இந்தியில் வெளியான ‘நிகம்மா’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், 77 வயதான விக்ரம் கோகலே புனேவில் உள்ள மருத்துவமனையில் வயது மூப்பின் காரணமாக உடல்நல பாதிப்பால் உயிரிழந்தார். இது தொடர்பாக அவர் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததன் காரணமாக பிரபல நடிகர் விக்ரம் கோகலே காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்திருந்தது.

பிரதமர் புகழஞ்சலி: நடிகர் விக்ரம் கோகலே மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “விக்ரம் கோகலே படைப்பாற்றல் கொண்ட பன்முக நடிகர். அவரது நீண்ட கால நடிப்பு பயணத்தில் அவர் நடித்த பல சுவாரஸ்யமான பாத்திரங்களுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்