''சின்ன இருமல் என்றால்கூட பெரிய செய்திகள் வருகிறது’’ - உடல்நலம் தேறி விஜய்சேதுபதி பட விழாவில் பங்கேற்ற கமல்

By செய்திப்பிரிவு

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நேற்றுமுன்தினம் மாலை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து மருத்துவமனை தரப்பிலிருந்து வெளியான அறிக்கையில், ‘‘நடிகர் கமல்ஹாசன் லேசான காய்ச்சல், சளி, இருமலுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலம் தேறி வரும் அவர், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்" என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன். தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள டிஎஸ்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவரிடம் உடல்நலம் குறித்து கேள்விகேட்கப்பட்டது. அதற்கு பதில் கொடுத்த கமல், "முன்பு பெரிய விபத்து எல்லாம் நேர்ந்தபோதுகூட அடுத்தப் படம் எப்போது என்று என்னிடம் கேட்பார்கள். இப்போது சின்ன இருமல் என்றால்கூட என்னைப் பற்றி பெரிய செய்திகள் எல்லாம் வருகிறது. அதற்கு காரணம், ஒன்று ஊடகம், பெருகிவரும் அன்பு என்று நான் நம்புகிறேன். நான் நன்றாக இருக்கிறேன். இந்தியன் 2 படத்துக்கான அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்