தன்னுடைய தந்தை கிருஷ்ணா மறைவையடுத்து, நடிகர் மகேஷ் பாபு உருக்கமான பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் என அறியப்படும் நடிகர் கிருஷ்ணா நவம்பர் 15-ம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் தந்தை குறித்து உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.
» அனுமதியின்றி யானை பயன்படுத்திய புகார்: ‘வாரிசு’ படக்குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்
» விழிப்புணர்வு குறும்படம்: வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரித்த யோகி பாபு
அதில், “உங்கள் வாழ்க்கை கொண்டாடப்பட்டது. உங்களின் மறைவு அனுசரிக்கப்பட்டது. அது உங்களின் மகத்துவம். நீங்கள் பயமின்றி உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தீர்கள். துணிச்சல் உங்களின் இயற்கையான குணம். என்னுடைய உத்வேகம் நீங்கள். என் தைரியம் நீங்கள். என்னுடைய எல்லாமுமாக இருந்த நீங்கள் சென்றுவிட்டீர்கள். ஆனால் விசித்திரமாக, நான் இதுவரை உணராத வலிமையை என்னுள் உணர்கிறேன். இப்போது நான் அச்சமின்றி இருக்கிறேன். உங்கள் ஒளி என்னுள் என்றென்றும் பிரகாசிக்கும். உங்கள் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வேன். உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன்... லவ் யூ நானா.. என்னுடைய சூப்பர் ஸ்டார்" என்று மகேஷ் பாபு பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago