நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பூர்விக வீட்டுக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். தொடர்ந்து திருக்குறுங்குடியில் உள்ள நம்பி பெருமாள் கோயிலையும் சுற்றிப் பார்த்த அவர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. படம் விரைவில் திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து ‘சைரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
கீர்த்தி சுரேஷின் அம்மா வழி பூர்விக கிராமம் திருநல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி. அண்மையில் அந்தக் கிராமத்திற்கு சென்றவர், அங்குள்ள தனது பூர்விக வீட்டை பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், நாங்குநேரி அருகே உள்ள திருக்குறுங்குடியில் உள்ள அழகிய நம்பி பெருமாள் கோயிலைச் சுற்றி பார்த்த புகைப்படத்தையும் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.
» “தமிழ்ப் படங்களில் இனி தொடர்ந்து நடிப்பேன்” - ப்ரியாமணி
» இயற்கை | மூணு பேரோட ஆசையும் நேர்மையா இருக்கு! - 19 Years of Iyarkai பதிவுகள்
இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில், “எனது முன்னோர்கள் வீட்டுக்கும் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோயிலுக்கும் சென்றது அற்புத அனுபவம். கட்டிடக் கலையை ரசித்தது மட்டுமல்லாமல், அமைதியையும், நேர்மறை உணர்வையும் அதிகம் உணர்ந்தேன்” என பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago