சசிகுமாருக்கு ‘காரி’ பொருத்தமான கதை - இயக்குநர் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள படம் ‘காரி’. சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். பார்வதி அருண், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி உட்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படம் பற்றி இயக்குநர் ஹேமந்த் கூறியதாவது:

இயக்குநர் கோகுலிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். இது எனக்கு முதல் படம். ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதை என்றாலும் அது மட்டுமே பிரதானமாக இருக்காது. அப்பா -மகன் பாசம் உட்பட கிராமங்களில் நடக்கும் பல விஷயங்கள் படத்தில் இருக்கிறது. சசிகுமாருக்கு இது பொருத்தமான கதை. அவருடைய உடல் மொழியில் இருந்து அனைத்தையும் மாற்றி நடித்திருக்கிறார். சென்னை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் கதை நடக்கும். சசிகுமாரிடம் கதையாக என்ன சொன்னேனோ, அதை மட்டுமே எடுத்தேன். அதை அவர் பாராட்டினார். இயக்குநர் பாலாஜி சக்திவேல் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவரும் சில ஆலோசனைகளைச் சொன்னார். இந்தப் படம் அனைவருக்கும் பிடித்த மாதிரி இருக்கும். இவ்வாறு ஹேமந்த் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்