மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் ‘மாமனிதன்’ - எல்.முருகன் பாராட்டு

By செய்திப்பிரிவு

“மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் மாமனிதன்” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் கடந்த ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. யுவன் சங்கர் ராஜா தயாரித்த இப்படத்திற்கு அவரும் இளையராஜாவும் இணைந்து இசையமைத்திருந்தனர். காயத்ரி, குரு சோமசுந்தரம், ஷாஜி சென் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

இந்நிலையில், இப்படத்தினை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், படத்தின் இயக்குநர் சீனுராமசாமியுடன் இணைந்து படத்தைக் கண்டு ரசித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் மாமனிதன்..! இப்படத்துக்கு சர்வதேச விருதுகள் மற்றும் மக்கள் அளித்த வெற்றி என உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் இது போன்ற படைப்புகளை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்