ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கும் ஷிவ ராஜ்குமார் ஸ்டில் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ் திரைத் துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் பிரத்யேக மேக்கிங் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் படம் செட்டில் இருந்து எடுக்கப்பட்டது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ஷிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், விநாயகன் என திரளான நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். தற்போது படக்குழு வெளியிடப்பட்டுள்ள படத்தில் நடிகர் ஷிவ ராஜ்குமார் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பது போல உள்ளது.

கடந்த பிப்ரவரி வாக்கில் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. தொடர்ந்து ஜூன் மாதம் படத்தின் தலைப்பு வெளியாகி இருந்தது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் எழுதி இயக்குகிறார்.

படத்திற்கான இசையை அனிருத் அமைக்கிறார். பேட்ட, தர்பார் போன்ற ரஜினிகாந்த் படங்களுக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். வரும் 2023 ஏப்ரல் வாக்கில் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்