மகேஷ் பாபுவின் தந்தையான தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா காலமானார்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் என அறியப்படும் நடிகர் கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 79. நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை இவர். திங்கள் அன்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. இருப்பினும் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து தசாப்தங்களாக திரை துறையில் இயங்கி வந்தவர். சுமார் 350-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். தொடக்க காலத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் 1965-க்கு பிறகு பிரதான ரோல்களில் நடிக்க தொடங்கினார். பல்வேறு ஜானர்களில் நடித்துள்ளார். எம்.பி ஆகவும் பணியாற்றி உள்ளார். 69 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவர்.

இவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகர் மகேஷ் பாபு. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகவும் கிருஷ்ணா செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள் அன்று அதிகாலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவரை மருத்துவர்கள் கண்காணித்துள்ளனர். அவரது உடல்நிலை கவலை அளிக்கும் வகையில் இருந்த காரணத்தால் வென்டிலேட்டர் பொருத்தபட்டுள்ளது. இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்