‘போலீஸ் திரும்ப பண்ணக்கூடாது என இருந்தேன். ஆனால் கதை மிகவும் பிடித்திருந்தது’ என ‘யூகி’ பட விழாவில் நடிகர் கதிர் தெரிவித்துள்ளார்.
ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி,பவித்ரா லக்ஷ்மி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் “யூகி”. வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நவம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கதிர், “சுழல் செய்து கொண்டிருக்கும் போது இந்தக்கதை வந்தது. போலீஸ் திரும்ப பண்ணக்கூடாது என இருந்தேன் ஆனால் கதை மிகவும் பிடித்திருந்தது. நட்டி, ஆனந்தி, நரேன் என எல்லோரையும் திருப்தி செய்யக்கூடிய கதை. மிக சுவாரஸ்யமான திரைக்கதையாக இருக்கும். பரியேறும் பெருமாளுக்கு பிறகு கயல் ஆனந்தியோடு நடிக்கிறேன். ஆனால் இந்தப்படம் மிக வித்தியாசமாக இருக்கும்” என்றார்.
நடிகை கயல் ஆனந்தி பேசுகையில், “கயல் படம் வந்து 8 வருடன் ஆகிறது. நீங்கள் காட்டி வரும் அன்புக்கு நன்றி. யூகி படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் இப்படம் பண்ணும் போது நான் உண்மையிலேயே கர்ப்பமாக இருந்தேன். மிக மிக சுவாரஸ்யமான கதை. மிக அட்டகாசமாக எடுத்துள்ளார்கள். மிக திறமையான நடிகர்களுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி” என்றார்.
» சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லர் - ஜெய் நடிக்கும் புதிய படம்
» “நடிப்புக்கு சின்ன பிரேக்” - நடிகர் ஆமீர்கான் திடீர் அறிவிப்பு
நடிகர் நரேன் பேசுகையில், “கைதி படத்திற்கு பிறகு நிறைய போலீஸ் பாத்திரம் இந்தக்கதையும் அந்த மாதிரி தான் என்பதால் இப்படத்தில் நடிக்க கூடாது என்று தான் கதை கேட்டேன் ஆனால் கதையை இயக்குநர் சொன்ன விதம் அதில் இருந்த திருப்பங்கள் என்னை ஆச்சர்யப்படுத்தியது. இந்தப்படத்தை அற்புதமாக எடுத்துள்ளார்கள். ஓடிடியில் நிறைய ஆஃபர் வந்தபோதும் இப்படத்தை நம்பி திரையரங்கிற்காக தயாரிப்பாளர்கள் கொண்டுவந்துள்ளார்கள்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
54 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago