நடிகர் ஆமீர்கான் நடிப்பிலிருந்து தற்காலிகமாக விலகியிருப்பதாகவும், விரைவில் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் க்ளாசிக் படமான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரபூர்வ இந்தி தழுவலாக ஆமீர்கான் நடிப்பில் வெளியான படம் ‘லால் சிங் சத்தா’. கரீனா கபூர் நாயகியாக நடித்திருந்த இப்படம் பான் இந்தியா முறையில் வெளியானது. ‘பாய்காட்’ ட்ரெண்டிங்கால் படம் பெரிய அளவில் வசூலில் முன்னேறாமல் தேக்கமடைந்து நஷ்டத்தை சந்தித்தது. இதையடுத்து ஆமீர்கானின் அடுத்த படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
அண்மையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆமீர்கான் தனது அடுத்த படத்தின் பெயர் ‘சாம்பியன்ஸ்’ என தெரிவித்தார். அவர் தான் நடிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது நடிப்பிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், ‘சாம்பியன்ஸ்’ படத்தை தனது ஆமீர்கான் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், படம் நடிப்பதிலிருந்து விலகி குடும்பத்துடன் இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள ஆமீர்கான், “சாம்பியன்ஸ் அற்புதமான ஸ்கிரிப்ட். அழகான கதை. மனதைக்கவரும் அழகான படம் இது. ஆனால் நான் நடிப்பிலிருந்து சிறிது காலம் விலகியிருக்க விரும்புகிறேன். நான் என் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன், என் அம்மா மற்றும் என் குழந்தைகளுடன் இருக்க ஆசைப்படுகிறேன். நான் ‘சாம்பியன்ஸ்’ படத்தைத் தயாரிப்பேன். ஏனென்றால் நான் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். நான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் மற்ற எந்த நடிகர்கள் நடிக்க விரும்புகிறார்கள் என்பதைப் அறிய அவர்களை அணுகுவேன்" என தெரிவித்துள்ளார்.
» கார்த்திக் வேணுகோபாலுடன் கைகோக்கும் ஹிப் ஹாப் ஆதி
» வடிவேலு குரலில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு
முக்கிய செய்திகள்
சினிமா
28 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago