கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. ’ஜோக்கர்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜுமுருகன் படத்தை இயக்குகிறார்.
’விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘சர்தார்’ படங்களில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் முன்னேறி வரும் நடிகர் கார்த்திக் நடிப்பில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கும் படம் ‘ஜப்பான்’. கார்த்தியின் 25-வது படமான இதில் அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார்.
தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாக வலம் வரும் சுனில், இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தவிர இயக்குநர் விஜய் மில்டன் இப்படத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த 8-ம் தேதி படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கிய நிலையில், தற்போது ‘ஜப்பான்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. இந்த முதல் பார்வை ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
43 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago