ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டதில் இந்தி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்சி என்பவர் மரணம் அடைந்துள்ளார்.
அவரின் வயது 46. குஷும், வாரிஸ், சூர்யபுத்ர கர்ன் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். அலிசியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவரின் மறைவு பாலிவுட் வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமஸ்தான உடல் மோகத்தால் அதிகரித்து வரும் அதீத உடற்பயிற்சி மரணங்கள் குறித்து பாலிவுட் தரப்பில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இதுதொடர்பாக தனது பதிவில் ’இதுபோன்ற துயரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். மருத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் இன்றி அதீத உடற்பயிற்சியில் ஈடுபடுவது முட்டாள்தனமானது. உடனடியாக இந்தபோக்கினை சரிசெய்ய வேண்டும்.’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
சரியாக ஓராண்டு முன்னதாக, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இதேபோல் ஜிம்மில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago