ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய படம் - பூஜையுடன் தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கின. இந்தப் படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'டார்லிங்' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், டிஷ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் - கவிதாலயாவுடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ்ப் படத்தில் இவர் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 2023-ம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் ‘நாளை’ படத்தை இயக்கிய உதய் மகேஷ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ஜி.வி பிரகாஷுடன் டேனியல் அன்னேபோப், ஹசீம் அப்துல் உள்ளிட்டவர்கள் நடிக்க உள்ளார்கள். கதாநாயகனுக்கும், சகோதரியின் மகளுக்கும் இடையேயான உறவைப் பற்றிய கதைக்களத்தைக் கொண்டதாக இந்த திரைப்படம் இருக்கும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்