“ஒருநாள் எப்படியிருந்தாலும்...” - ‘யசோதா’ பட ப்ரமோஷனக்கு தயாராகும் சமந்தா

By செய்திப்பிரிவு

“ஒருநாள் எப்படி இருந்தாலும், எவ்வளவு மோசமான விஷயங்கள் இருந்தாலும் நம்மை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘யசோதா’. வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் பான் இந்தியா முறையில் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஹாலிவுட் சணடை பயிற்சியாளருடன் பயிற்சி எடுத்த விடியோக்களும் வைரலானது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மயோசிடிஸ் (தசை அழற்சி) எனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகை சமந்தா தெரிவித்திருந்தார். சிகிச்சை எடுத்துக்கொண்டே டப்பிங் செய்த புகைப்படங்கள் வைரலானது.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு உடையுடன் கூடிய புகைப்படங்களை பதிவிட்டுள்ள சமந்தா, இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடிகை சமந்தா பல்வேறு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்கான பிரத்யேக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தன்னுடைய பதிவில், "எனது நல்ல நண்பர் இயக்குநர் ராஜ் (ஃபேமிலி மேன் புகழ்) சொல்வது போல், ஒருநாள் எப்படி இருந்தாலும், எவ்வளவு மோசமான விஷயங்கள் இருந்தாலும், நம்மை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். யசோதா திரைப்பட ப்ரோமோஷனுக்காக ஒருநாள் ராஜிடம் இருந்து கடன் வாங்கி உள்ளேன். 11ஆம் தேதி திரையரங்குகளில் சந்திப்போம்'" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்