‘இது படமல்ல; பக்தியின் பிரதிநிதித்துவம்’ - விமர்சனங்களால் ஒத்திவைக்கப்பட்ட ஆதி புருஷ் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் ஓம் ராவுத் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

'பாகுபலி 2', 'சாஹோ', ‘ராதே ஷ்யாம்’ படங்களுக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆதி புருஷ்’. நாயகியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். பான் இந்தியா முறையில் வெளியாக உள்ள இப்படத்தை பாலிவுட் இயக்குநர் ஓம் ராவுத் இயக்கியுள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சயீஃப் அலிகான் நடிக்கிறார். ‘ஆதிபுருஷ்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட இந்தப் படம் 2023, ஜனவரி 12-ல் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. அதையொட்டி படத்தின் டீசர் வெளியானது. டீசரைப்ன்பார்த்த ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும், வீடியோ கேம் போன்ற மோசமான கிராஃபிக்ஸ்கள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி விமர்சித்தனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய இயக்குநர் ஓம் ராவுத், “படத்தின் வெறும் 95 வினாடி காட்சிகளை மட்டுமே பார்த்திருக்கிறீர்கள். டீசர் மீதான விமர்சனங்களை எடுத்துக்கொள்கிறோம். அதேசமயம் படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது என உறுதியளிக்கிறேன்'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஓம் ராவுத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஜெய் ஸ்ரீ ராம். ஆதிபுருஷ் ஒரு திரைப்படம் அல்ல, பிரபு ஸ்ரீ ராம் மீதான நமது பக்தியின் பிரதிநிதித்துவம் மற்றும் நமது சமஸ்கிருத வரலாற்றின் மீதான அர்ப்பணிப்பு. பார்வையாளர்களுக்கு முழுமையான காட்சி அனுபவத்தை அளிக்கும் வகையில், படத்தில் பணிபுரியும் குழுக்களுக்கு அதிக நேரம் கொடுக்க வேண்டும்.

இந்தியாவே பெருமைப்படும் வகையில் திரைப்படம் எடுக்க உறுதி பூண்டுள்ளோம். உங்கள் ஆதரவும், அன்பும், ஆசீர்வாதமும் தான் எங்களைத் தொடர்ந்து வழிநடத்துகிறது” என்று தெரிவித்து, படம் வரும் 2023 ஜனவரி 16-ம் தேதி வெளியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்