ஒரு திறமையாளருக்கு வாய்ப்பளித்ததில் மகிழ்ச்சி - நடிகை ரவீனா ரவி குறித்து நெகிழ்ந்த இயக்குநர்

By செய்திப்பிரிவு

'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள படம் 'லவ் டுடே'. சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, இவானா, ரவீனா ரவி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ள இந்தப் படம் நேற்று வெளியானது. 2கே கிட்ஸை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் வாய்ப்பளித்த பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றி தெரிவித்து டப்பிங் கலைஞர் மற்றும் நடிகையான ரவீனா ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அதில், "இந்தப் படத்தை பார்ப்பவர்கள் எல்லோரும் தங்கள் கவலைகளை மறந்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். சிரிக்க வைக்கவும், அதே சமயம் சிந்திக்கவும் வைக்கிறது இப்படம். சிரிப்பு, சிந்தனை அனைத்தும் சேர்ந்து வருவது அரிது. அதை கொடுத்ததற்கும் இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்தற்கும் இயக்குநருக்கு எனது நன்றிகள். அதேபோல், படப்பிடிப்பு தளத்தில் என்னைச் சிரிக்க வைத்த யோகி பாபு சாருக்கு நன்றி" இவ்வாறு தெரிவித்தார்.

ரவீனாவை இப்பதிவை டேக் செய்து, "உங்களைப் போன்ற திறமையாளருக்கு வாய்ப்பளித்ததில் எனக்குத்தான் மகிழ்ச்சி" என்று இயக்குநர் பிரதீப் நெகிழ்ச்சியாகப் பதில் கொடுத்துள்ளார். இந்தப் பதிவு இப்போது வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்