பாலிவுட்டின் காலம் முடிந்துவிட்டதா? - நடிகை ரகுல் பிரீத் சிங் பதில்

By செய்திப்பிரிவு

"கரோனா காலத்திற்கு பிறகு மக்களின் ரசனை மாறிவிட்டது. கன்டென்ட் தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன'' என்று நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பையில் இந்தியா டுடே மாநாட்டில் கலந்துகொண்ட நடிகை ரகுல் பிரீத் சிங் பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களின் வரவேற்பு குறித்து பேசினார். அப்போது அவர், ''கரோனா தொற்று காலத்திற்கு பிறகு கன்டென்ட் தொடர்பான விவாதங்கள் மேலெழுந்துள்ளன. இதன் மூலம் ஆரோக்கியமான கூற்றுகள் ஒருங்கிணைந்துள்ளன. இது ஒரு காலக்கட்டம். திரையில் பலனளிக்காத விஷயங்கள் குறித்தே எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அதற்கு பின்னால் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. இன்று தென்னிந்திய திரைப்படங்கள் நன்றாக ஓடுகின்றன. அதேசமயம் இங்கு வெளியாகும் படங்கள் குறித்து மட்டுமே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். கரோனா தொற்று காலத்திற்கு பிறகு, பார்வையாளர்களின் ரசனை மாறிவிட்டது. இது தென்னிந்திய அல்லது பாலிவுட் படங்களின் வரவேற்பை பொறுத்து மட்டுமல்ல; மாறாக மக்களுக்கு விருப்பமான சினிமாவை பற்றியது. அவர்களின் வாழ்க்கையை விட பெரிய சினிமா மக்களுக்கு தேவைப்படுகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE