வெளியானது விஜய் பாடிய ‘வாரிசு’ பட சிங்கிள் - ரசிகர்கள் கொண்டாட்டம் 

By செய்திப்பிரிவு

விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் அவரே பாடியுள்ள ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகியுள்ளது. பாடல்களை வரிகளை விவேக் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரிசு'. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்ப கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.

இந்நிலையில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். அவருடன் இணைந்து எம்.எம்.மானசி பாட, பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பாடல் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE