ரஞ்சிதமே... விஜய் பாடும் ‘வாரிசு’ பட பாடலின் ப்ரோமோ வெளியீடு

By செய்திப்பிரிவு

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள 'வாரிசு' படத்தின் முதல் பாடலின் (ஃபஸ்ட் சிங்கிள்) ப்ரோமோ வெளியானது.

தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார். குடும்ப ரசிகர்களை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், பாடல் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு ’வாரிசு’ படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ (ஃபஸ்ட் சிங்கிள்) படக்குழுவால் வெளியிடப்பட்டது. மொத்தம் 30 விநாடி அளவில் இந்த ப்ரோமோ பாடல் வெளியாகி உள்ளது. ’ரஞ்சிதமே’ தொடங்கும் இப்பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார். பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுதி இருக்கிறார். வீடியோ இங்கே...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE