இந்தியில் ‘கேஜிஎஃப்’ முதல் பாகத்தின் வசூல் சாதனையை முறியடித்த ‘காந்தாரா’

By செய்திப்பிரிவு

இந்தி மொழியில் டப் செய்யப்பட்டு வெளியான ‘காந்தாரா’ திரைப்படம், 'கேஜிஎஃப் 1’ படத்தின் இந்தியின் மொத்த வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம் 'காந்தாரா'. கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து படத்தை பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ரூ.16 கோடியில் உருவான இப்படம் ரூ.200 கோடி வரை வசூலில் நெருங்கி சாதனை படைத்துள்ளது. இந்தியில் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 19 நாட்கள் கடந்துள்ளன. இது தொடர்பாக சினிமா வர்த்தகர்கள் கூறுகையில், 'காந்தாரா' படத்தின் இந்தி வெளியீட்டை பொறுத்தவரை 17.06 சதவிகிதம் பேர் திரையரங்குகளை ஆக்கிரமித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியில் வெளியான 'கேஜிஎஃப் 1' இந்தி பதிப்பு மொத்தமாக ரூ.45 கோடி வரை வசூலித்தது. அதன் மொத்த வாழ்நாள் வசூலை 'காந்தாரா' கடந்து முன்னேறி வருகிறது. இத்தனைக்கும் இந்தியில் அஜய் தேவ்கனின் 'தேங்க் காட்', அக்‌ஷய் குமாரின் 'ராம் சேது' படங்கள் தீபாவளியையொட்டி வெளியாகியிருந்த சூழலில் 'காந்தாரா'வின் வசூல் வேட்டையை தடுக்க முடியவில்லை. அதேசமயம், ‘கேஜிஎஃப்2' படத்தை பொறுத்தவரை அது இந்தி பதிப்புகளில் ரூ.400 கோடிக்கு அதிகமாக வசூலித்திருந்தது குறிப்பிடத்ததக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்