நடிகை ரம்பாவின் கார் விபத்து - இளைய மகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

By செய்திப்பிரிவு

நடிகை ரம்பாவின் கார் விபத்துக்குள்ளானதில், அவரும் குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார்கள். ஆனால், அவரின் இளைய மகள் சாஷா காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். `உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆன ரம்பா, 'அருணாசலம்', 'காதலா காதலா', 'நினைத்தேன் வந்தாய்' உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2019-ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கனடாவில் வசித்து வரும் அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகளை ரம்பா காரில் அழைத்து வந்துள்ளார். அப்போது எதிரே வந்த காரின் மீது ரம்பாவின் கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவரும் மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இளைய மகள் சாஷா காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வரும்போது நடந்த கார் விபத்தில் குழந்தைகளுடன் நான் உயிர் தப்பினேன். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். இளைய மகள் சாஷா இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எங்களுக்காக பிரார்த்தியுங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

35 mins ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்