நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தபோது காதலில் விழுந்தனர். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தங்கள் காதலை அதிகாரபூர்வமாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளனர். இவர்கள் திருமணம் இந்த மாத இறுதியில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பான புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவரும் பகிர்ந்துள்ளனர். இகுறித்த பதிவில் மஞ்சிமா மோகன் , "மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்துபோன போது நீ ஒரு காவலனாய் என் வாழ்வில் வந்தாய். வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர உதவினாய். நீ எப்போதும் எல்லாவற்றிலும் என்னுடைய ஃபேவரட்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கார்த்திக்கின் மகனான கவுதம் கார்த்திக் இயக்குநர் மணிரத்னத்தின் 'கடல்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ' ரங்கூன்;, 'இவன் தந்திரன்', 'தேவராட்டம் ' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சிம்பு நடிக்கும் 'பத்து தல', ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் பொன்குமார் இயக்கத்தில் ‘ஆகஸ்ட் 16 - 1947' ஆகிய படத்திலும் நடித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago