நடிகை ஹன்சிகா மோத்வானி, தொழிலதிபரை மணமுடிக்க உள்ளதாகவும், பிரமாண்டமான முறையில் டிசம்பர் 4-ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான 'ஹவா' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ஹன்சிகாவின் 50-வது படமான ‘மஹா’ அண்மையில் வெளியானது.
இந்நிலையில், ஹன்சிகா தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான சோஹைல் கதுரியாவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்பூரில் டிசம்பர் 4-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமண நிகழ்விற்கு நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் அழைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதை ஹன்சிகா தரப்பு இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
31 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago