‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இசையமைப்பாளர் திடீர் மரணம்

By செய்திப்பிரிவு

'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் இசையமைப்பாளர் ரகுராம் அரியவகை நோயால் உயிரிழந்தார். அவருக்கு வயது 38.

கடந்த 2017-ம் ஆண்டு இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், விதார்த், ரவீனா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'ஒரு கிடாயின் கருணை மனு'. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு ரகுராம் இசையமைத்திருந்தார். இந்தப்படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து சில திரைப்படங்கள், ஆல்பம் பாடல்கள் உள்ளிட்டவற்றிற்கு அவர் இசையமைத்தார். இதனிடையே அவருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போனது. சிறு வயதிலேயே அரியவகை நோய் ஒன்றால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரகுராம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இளம் இசையமைப்பாளரான ரகுராமின் மறைவு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது 'சத்திய சோதனை' திரைப்படத்திற்கும் அவர் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

48 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்