'கே ஜி எஃப்' திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் 'காந்தாரா'. தொடக்கத்தில் கன்னட மொழியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு காரணமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டது.
செப்டம்பர் 30-ம் தேதி வெளியான இப்படம் ஸ்லோ பிக்அப் முறையில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் பிரபலாக தொடங்கியது. தற்போது படம் நல்ல வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கும் நிலையில், பிரபலங்கள் பலரும் படத்தை புகழ்ந்து வருகின்றனர். சில தினங்கள் நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டினார்.
அதில், ‘தெரிந்ததை விட தெரியாதது தான் அதிகம் என்பதை சினிமாவில் 'காந்தாரா' படத்தை விட யாரும் தெளிவாக சொல்லியிருக்க முடியாது. கூஸ்பம்ப் தருணத்தை கொடுத்துள்ளீர்கள் ரிஷப் ஷெட்டி. எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகராக உங்களுக்கு வாழ்த்துகள் ரிஷப். இந்திய சினிமாவில் இந்த தலைசிறந்த படைப்பின் ஒட்டுமொத்த நடிகர்களுக்கும், குழுவினருக்கும் வாழ்த்துக்கள்'' என்று பாராட்டி இருந்தார்.
இந்நிலையில், ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்தும் நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு வரவழைத்து அவரை பாராட்டியிருக்கிறார் ரஜினி. இந்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரிஷப் ஷெட்டி ரஜினி உடனான சந்திப்பை பகிர்ந்து "ஒரு முறை எங்களைப் புகழ்ந்தால், நூறு முறை உங்களைப் புகழ்வோம். நன்றி ரஜினி சார். எங்களின் காந்தாரப் படத்தைப் பாராட்டியதற்கு நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என்று நெகிழ்ந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
39 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago