கருத்தரிப்பு பரிசோதனை முடிவுகளை வெளியிட்டு ரசிகர்களைக் குழப்பிய பார்வதி, நித்யா மேனன்

By செய்திப்பிரிவு

நடிகைகள் பார்வதியும், நித்யா மேனனும் கருத்தரிப்பு பரிசோதனை முடிவுகளை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'சீயான் 61' படத்தில் நடிகை பார்வதி நடிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவில் அவரைக் கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதேபோல, தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடிகை நித்யா மேனனின் கதாபாத்திரமும் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்நிலையில், இந்த இரண்டு பேரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படமும், அதற்கான கேப்ஷனும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதலில் நடிகை பார்வது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிரகனன்ஸி கிட் புகைப்படத்தை பகிர்ந்து, அதில் 'ஆச்சரியரங்கள் தொடங்கியுள்ளன' என தலைப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் பார்வதி கர்ப்பம் தரித்திருப்பதாக எண்ணி அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல், பாடகி சின்மயி, நடிகைகள் ஸ்வரா பாஸ்கர், குனீத் மோங்கா உள்ளிட்ட பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அதேபோல, நடிகை நித்யாமேனனும் அதே புகைப்படத்தை பதிவிட்டு, அதே கேப்ஷனிட்டு இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். இதையடுத்து அவரும் கர்ப்பமாக இருப்பதாக எண்ணி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இரண்டு நடிகைகளும், ஒரே புகைப்படத்தையும், ஒரே கேப்ஷனையும் பதிவிட்டிருப்பதை உணர்ந்த ரசிகர்கள் குழப்படைந்தனர். பின்னர் இது ஒரு படத்திற்கான புரோமோஷன் என்பதை ரசிகர்கள் புரிந்துகொண்டனர். மேலும், அது என்ன படம், யார் இயக்குகிறார் என்பது குறித்து எந்த விவரங்களும் இன்னும் வெளியாகவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்