சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆன மிஷ்கின்

By செய்திப்பிரிவு

நடிகர் சிவகார்த்திகேயன், இப்போது மடோன் அஸ்வின் இயக்கும் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். அவர் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் மிஷ்கின் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அதை இயக்குநர் மிஷ்கின் உறுதிப்படுத்தியுள்ளார். அந்தப் படத்தில், தான் எம்.எல்.ஏவாக நடிக்க இருப்பதாகவும் சிவகார்த்திகேயனுக்கு மெயின் வில்லனாக நடிப்பதாகவும் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE