முதல் 4 நாட்களில் ‘பிரின்ஸ்’ வசூலை முந்திய ‘சர்தார்’

By செய்திப்பிரிவு

கார்த்தியின் 'சர்தார்' திரைப்படம், சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் வசூலை விட கூடுதலாக ஈட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'சர்தார்'. ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடிந்திருந்த இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். தண்ணீர் மாஃபியா குறித்தும், உளவாளியின் வாழ்க்கை குறித்த கதையை அடிப்படையாக கொண்ட இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், படம் கடந்த 4 நாட்களில் ரூ.40-45 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படம் ரூ.50 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'பிரின்ஸ்'. கடந்த அக்டோடபர் 21-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படத்தில் உக்ரைன் நடிகை மரியா நடித்திருந்தார். தமன் இசையமைத்திருந்த இப்படம் காதல் கதையை மையமான கொண்டு வித்தியாசமான காமெடி ஜானரில் உருவாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில், ரூ.30-35 கோடி வரை படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே 'பிரின்ஸ்' சற்று பின்தங்கியே உள்ளது. இதனால் 'சர்தார்' படத்திற்கான வரவேற்பு கூடியுள்ளது. மேலும், நவம்பர் 4-ம் தேதி வரை பெரிய படங்கள் எதுவும் வெளியாகததால் இரண்டு படங்களுக்கும் வசூல் கூடலாம் என திரை வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்