இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரம் இணையும் புதிய படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படக்குழு தற்போது தலைப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் பெயர் ‘தங்கலான்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை 54 நொடிகள் ஓடும் வீடியோ மூலம் படக்குழு அறிவித்துள்ளது. அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு ஃபிரேமும் மிரட்டும் தொனியில் உள்ளது.
தங்கலான் படத்தை ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் நீலம் படத் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. பசுபதி, மாளவிகா மோகனன் உட்பட பலர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் மையக்கரு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் அமைந்துள்ளதை போல உள்ளது.
கோலார் தங்க வயல் குறித்த கதை என பா.ரஞ்சித் தெரிவித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம் கடப்பாவில் அக்டோபர் 18-ம் தேதி தொடங்கியது. படம் பான் இந்தியா பாணியில் வெளியிடப்படும் என தெரிகிறது. அதனை குறிப்பிடும் வகையில் 5 மொழிகளில் தலைப்பு வெளியாகி உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago