T20 WC | இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் கமெண்ட்ரியில் சிவகார்த்திகேயன் 

By செய்திப்பிரிவு

இன்றைய இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நேரலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கமெண்ட்ரி செய்தார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இந்த தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

இந்நிலையில், இன்று இந்தப் போட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் நடிகர் சிவகார்த்தியேகன் சிறப்பு கமெண்ட்ரி செய்தார். பிரின்ஸ் படத்திற்கு விளம்பரத்தின் ஒருபகுதியாக இந்த கமெண்ட்ரி நடைபெற்றது. அப்போது ஆர். ஜே பாலாஜி உங்களுக்கு இந்திய வீரர்கள் அல்லாமல் வேறு எந்த நாட்டு வீரரை பிடிக்கும் என்று சிவாவிடம் கேட்க அதற்கு சிவகார்த்திகேயன் ’எனக்கு பாபர் ஆஸம் பிடிக்கும்’ என்றார். அவர் சொல்லி முடிக்கும் முன், பாபர் ஆஸம் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். தற்போது பாகிஸ்தான் அணி 13 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களை சேர்த்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்