ஒரே நாளில் 2 டீசர்... ஸ்டைலிஷ் வில்லன்... - கவனம் ஈர்க்கும் கௌதம் வாசுதேவ் மேனன்

By செய்திப்பிரிவு

திரையுலகில் 20 ஆண்டுகளை கௌதம் வாசுதேவ் மேனன் நிறைவு செய்துள்ளார். தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் என்று பெயரெடுத்திருக்கும் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெந்து தனித்தது காடு படம் ரிலீஸ் ஆனது. சில ஆண்டுகள் முன்பே இயக்குநராக மட்டுமில்லாமல், நடிகராகவும் பணியாற்றி வருகிறார். கிட்டத்தட்ட முழுநேர நடிகராக இருக்கும் அளவுக்கு அவரின் நடிப்பில் படங்கள் அடிக்கடி ரிலீஸ் ஆகிவருகின்றன.

வெந்து தனித்தது காடு படத்துக்கு பிறகு அவர் மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்துவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், இன்று இரண்டு முக்கிய படங்களின் டீசர் வெளியாகின. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவான 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'மைக்கேல்'. இந்தத் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். இவருடன் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

இன்னொரு படம் 13. ஜிவி பிரகாஷ் நயாகனாக நடித்துள்ள இந்தப் படத்தை விவேக் என்பவர் இயக்கியுள்ளார். சித்துகுமார் இசையில், மூவேந்தர் ஒளிப்பதிவில் காஸ்ட்ரோ படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மெட்ராஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த இரண்டு படங்களிலும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக தோன்றுகிறார். வழக்கமாக அவருக்கே உரித்தான ஸ்டைலிஷ் வில்லன் தோற்றத்தில் அவரின் நடிப்பு இரண்டு டீசர்களிலும் கவனம் ஈர்க்க வைக்கிறது.

அதேநேரம், இயக்குநராக வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளிலும் அவர் தீவிரம் காட்டிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்