'டான்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'பிரின்ஸ்'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கியுள்ளார். தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது. தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படம் மற்றும் மண்டேலா இயக்குநர் அஷ்வின் இயக்கும் 'மாவீரன்' என ஒப்பந்தம் ஆகியுள்ள சிவகார்த்திகேயன், அதற்கடுத்ததாக வெங்கட் பிரபு உடன் இணையவுள்ளார்.
இந்த அறிவிப்பை பிரின்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் வெளியிட்டார். வெங்கட் பிரபு இப்போது நாகசைதன்யாவை ஹீரோவாக வைத்து தமிழ், தெலுங்கு பைலிங்குவல் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பூஜையிலும் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். இருவரும் தங்களின் கமிட்மென்ட்களை முடித்த பின்னர் இணையலாம் என்றும், அந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தயாரிக்கலாம் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் இப்போது இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. பிரின்ஸ் பட வெளியீட்டை முன்னிட்டு தன்னிடம் ரசிகர்கள் ட்விட்டரில் கேள்வி கேட்கலாம் என்று சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். அதன்படி, இயக்குநர் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனிடம், "சகோதரரே நாம் எப்போது ஷூட்டிங் செல்லலாம். அப்புறம் நம்ம அனுதீப் உங்கள எதாவது தொந்தரவு பண்ணுனரா?" என்று கேள்விகேட்டுள்ளார்.
அதற்கு ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி, "ஷூட்டிங் ப்ளான் பண்ணுறீங்களா" என்று ஷாக்கிங்காக கேட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
45 mins ago
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago