13 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவில் மீண்டும் ஜோதிகா

By செய்திப்பிரிவு

13 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவில் காலடி வைக்கும் ஜோதிகாவின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்து வந்தார். சமீப காலமாக மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் மலையாளப் படமான 'காதல் - த கோர்' என்ற படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

மலையாள நடிகர் மம்முட்டி 'காதல் - த கோர்' ஃபஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி இந்தப் படத்தை தயாரிக்க, ஜோ பேபி இப்படத்தை இயக்குகிறார். மம்முட்டி கதாநாயகனாக நடிக்க, ஜோதிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோதிகா மீண்டும் மலையாளத்தில் நடிக்க உள்ளார். இதற்கு முன்பு இரண்டு மலையாளப் படங்களில் ஜோதிகா நடித்திருக்கிறார்.

படத்தின் ஃபஸ்ட் லுக் குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “முதல் நாளிலிருந்தே படத்தின் அனைத்து நிகழ்வுகளையும் இயக்குநர் ஜோ பேபி மற்றும் குழுவினர் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். மம்முக்கா, ஜோதிகா ஆகியோருக்கு எனது வாழ்த்துகள், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜோ” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்