சிம்பிள் கதை,  புதிதான காமெடி ட்ரீட்மென்ட்... - ‘பிரின்ஸ்’ ஸ்பெஷல் பகிர்ந்த சிவகார்த்திகேயன்

By செய்திப்பிரிவு

'பிரின்ஸ்' படம் குறித்தும் அதில் இடம்பெற்றுள்ள சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது 'பிரின்ஸ்' திரைப்படம். இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்,' 'பிரின்ஸ் மிகவும் சிம்பிளான கதை. இந்தியன் பையன், பிரிட்டிஷ் பெண்ணை காதலிக்கிறான் என்பதுதான் கதை. ஆனால், இதில் இயக்குநர் அனுதீப் கொடுத்திருக்கும் காமெடிக்கான ட்ரீட்மென்ட் தான் படத்தில் புதிய விஷயம். காமெடி என்றால் கவுன்டர் செய்யாமல் சம்பந்தமேயில்லாத வேறொரு பதில் சொல்வது சில்லியான பதில் சொல்வது என புதிய விஷயம் சொல்லியிருக்கிறோம்.

படத்தில் காட்சிப்படுத்தபட்டுள்ள ஊர் தமிழ்நாட்டில் இல்லை. அது கற்பனையில் தோன்றிய ஊர். அந்த ஊர், மக்கள் குறித்தும் அங்கு நிலவும் காதல் குறித்து ஜாலியாக கொண்டு சேர்க்கும் படமாக இதை உருவாக்கியிருக்கிறோம். இது அனுதீப்பின் சிக்னேஞ்சர். அவருடைய ஸ்டைல் இது. இந்தப் படத்தை பார்வையாளர்கள் எப்படி எடுத்துக்கொண்டு ரசிக்கப்போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்.

கதைக்குள் சின்னச் சின்ன சர்ப்ரைஸ் இருக்கும். தீபாவளிக்கு பார்வையாளர்கள் திரையரங்குக்கு வந்த ஜாலியாக படம் பார்க்கும் மூட்-ஐ தான் உருவாக்கியிருக்கிறோம். சொல்லப்போனால் ஒரே ஒரு சண்டைக்காட்சி தான் இருக்கும். 'சர்தார்' படம் திரைக்கு வருகிறது. கார்த்தி, பி.எஸ்.மித்ரனுக்கு வாழ்த்துகள். இரண்டு படங்களும் ஹிட் ஆக வேண்டும்.

அனுதீப் தெலுங்கில் தான் சிந்திப்பார். அந்தக் காமெடியை தமிழுக்கு மாற்றி கொண்டு வரவேண்டும். இரண்டு தரப்பு மக்களுக்கும் பிடிக்க வேண்டும். இதை ஏன் நாம் பரிசோதித்து பார்க்க கூடாது என நினைத்தோம். தமிழிலிருந்து ஒரு ஹீரோ, தெலுங்கிலிருந்து ஒரு இயக்குநர் இது க்ளிக் ஆகிவிட்டால் தென்னிந்திய திரைத்துறையில் மாற்றங்கள் இருக்கும். காரணம் நிறைய நாயகர்கள் ஆப்ஷன்ஸ் இருக்கும், கூட்டணிகள் அமையும், தயாரிப்பாளர்கள் தயாரிக்க ஆர்வத்துடன் முன்வருவார்கள். அதனால்தான் இதை சவாலாக கொண்டு வந்திருக்கிறோம். பார்வையாளர்களின் ரியாக்‌ஷன்களுக்காக காத்திருக்கிறோம். எனக்கு இது முதல் பண்டிகைக் கால திரைப்படம் என்பதால் இந்த தீபாவளி எனக்கு ஸ்பெஷல்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்