ஆந்திராவில் தொடங்குகிறது பா.ரஞ்சித் - விக்ரம் இணையும் படத்தின் படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

விக்ரம் - பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கடப்பாவில் தொடங்குகிறது.

'பொன்னியின் செல்வன்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு நடிகர் விக்ரம் தற்போது தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார். இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையக்க உள்ளார். 'சீயான்61' என அழைக்கப்படும் இப்படம் 1800 காலக்கட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் என்றும், படம் 3டியில் வெளியாகும் எனவும் பா.ரஞ்சித் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மேலும், கேஜிஎஃப் குறித்த கதை என அவர் கூறியிருந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம் கடப்பாவில் நாளை தொடங்க இருக்கிறது. மேலும், படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே ஒப்பந்தமாகியிருந்த படங்களால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், படத்தில் மாளவிகா மோகன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்