''மித்ரன் மிகவும் சிறந்த இயக்குநர். மித்ரன் போன்ற இயக்குநர்கள் கையில் தமிழ் சினிமா பாதுகாப்பாக உள்ளது'' என நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.
கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது 'சர்தார்' திரைப்படம். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகை ரஜிஷா பேசும்போது, ''இயக்குநர் மித்ரனுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் அது குறைவாகத்தான் இருக்கும். ஏனென்றால், என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால், அந்த கதாபாத்திரத்தைப் பற்றி இப்போது கூற இயலாது. இதுபோன்ற வலிமையான கதாபாத்திரத்தை என்மீது நம்பிக்கை வைத்துக் கொடுத்ததற்கு நன்றி. கார்த்தி பொறுமை மற்றும் அன்பான நடிகராக இருந்தார். இதுபோன்ற மனப்பான்மை கொண்ட நடிகருடன் நான் இதுவரை நடித்ததில்லை'' என்றார்.
நடிகை ராஷி கண்ணா பேசும்போது, ''இப்படத்தின் ட்ரெய்லர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். மித்ரன் மிகவும் சிறந்த இயக்குநர். மித்ரன் போன்ற இயக்குநர்கள் கையில் தமிழ் சினிமா பாதுகாப்பாக உள்ளது. பல கதாபாத்திரங்கள் அமைத்து, பெண்ணியம் மற்றும் சமூக கருத்துகளையும் பொறுப்புணர்வோடு கதை அமைப்பது கடினம். அப்படியொரு ஒரு கடினமாக கதையை மிகவும் சுலபமாகவும், எளிமையாகவும் கையாண்டிருக்கிறார் மித்ரன். அவர் இயக்கும் அனைத்துப் படங்களையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல் அவரது இயக்கத்தில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன்.
கார்த்தி மிகவும் பாதுகாப்பான நடிகர். அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ரஜிஷா நன்றாக நடித்திருக்கிறார். அவர் இன்னும் நிறைய தமிழ் படங்கள் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
25 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago